ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் ஏழு குற்றவாளிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாந்த் கோவித் நிராகரித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர்.
இக்கைதிகள் விடுதலை தொடர்பில் மாநில அரசு கொண்டுள்ள கருத்தை மத்திய அரசாங்கம் ஏற்புடையதாக கருதவில்லை என ஜனாதிபதி கூறினார்.
இத்தகைய விடயங்கள் குறித்து அமைச்சரவையின் ஆலோசனையை கேட்கும் கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு. கடந்த நான்கு வருடங்களில் தமிழக அரசாங்கம் இரு தடவைகள் உட்துறை அமைச்சிடம் குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21ம் திகதி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.