உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE நேற்று (மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெப்டன் Lionel SIEGFRIED தலைமையில் இயங்கும் PROVENCE, 142.20 மீட்டர் நீளமுள்ள ஒரு நாசகார வகைக் கப்பலாகும். இலங்கையில் தங்கியிருக்கும் போது, கப்பலின் குழுவினர் நாட்டிலுள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்லவுள்ளார்கள். இக் கப்பல் மார்ச் 20 ஆம் தேதி நாட்டைவிட்டு செல்லவுள்ளது