இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுத் தலைவர் Séverine Chappaz, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இருவரும் சமூக நல முயற்சிகள், மனிதாபிமான ஒத்துழைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அமைப்பின் முக்கிய பங்கை பிரதி அமைச்சர் பாராட்டியதுடன், மேலும் அதன் செயல்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் எளிதாக்கவும் வலுவான கூட்டாண்மைக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தெரிவித்தார். மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை (I H L) தொழில்முறை இராணுவ பயிற்சி படிப்புகள்/பயிற்சிகளில் ஒருங்கிணைப்பதில் பாதுகாப்பு அமைச்சின் உறுதிப்பாட்டையும், தொடர்புடைய சர்வதேச பயிற்சி படிப்புகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்கத் தயாராக இருப்பதையும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மனிதாபிமான முயற்சிகளை ஆதரிப்பதில் ICRC யின் அர்ப்பணிப்பை திருமதி சப்பாஸ் இங்கு உறுதிப்படுத்தினார். ICRC பிரதிநிதிகளான பிரிகேடியர் ஜெனரல் Lloyd Gillet (ஓய்வு) மற்றும் சன்ன ஜயவர்தன ஆகியோரும் இச்சந்திப்பின் போது சமூகமளித்திருந்தனர்.