சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்படும், டென்னிஸ் விளையாட்டை ஒத்தவகையில் கிராண்ட்ஸ்லாம் வடிவில் சர்வதேச T20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமொன்று இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த திட்டம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரபல வீரரான நீல் மாக்ஸ்வெல்லின் ஆலோசனையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்துக்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது.
இதன்படி, டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறுகின்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களைப் போல, ஆண்டொன்றுக்கு நான்கு வேறு இடங்களில் நடைபெறும் எட்டு அணிகளைக் கொண்ட லீக் தொடராக இப்புதிய T20 லீக் தொடர் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.