மலையக மக்களுடன் இணைந்து இம்முறை தேசிய வெசாக் விழாவை நுவரெலியாவில் கொண்டாடவுள்ளதாக பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
இன்று (17) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நாங்கள் 12 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம்.
இம்முறை தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.