படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர்; நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்க தகவல் திணைக்களத்தில் சமீபத்தில் (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.