சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியக் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்
இன்று (12) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.