உள்ளூர் செய்திகள் செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (11) மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் (12) திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என்றும் பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார்.

மழைக் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அதன் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி உயர்த்தப்பட்டு, வினாடிக்கு 530 கன அடி நீர் அபங் கங்கைக்கு வெளியேற்றப்பட்டது.

பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 113,200 ஏக்கர் அடி வரை அதிகரித்ததால், இந்த வான் கதவுகளை திறக்க வேண்டியிருந்தது என்று நீர்ப்பாசன பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன