கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹூசைனி, பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளதுடன் வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லிக் குற்றமில்லை, பத்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்துமிருந்தார்.
இந்நிலையில் அவர் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு இரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. நான் ஒரு நாள் வாழ்வதற்கு 2 யுனிட் இரத்தம் மற்றும் ப்ளேட்லெட்ஸ் தேவை. நான் கொஞ்ச நாட்கள்தான் உயிருடன் இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். நான் கராத்தே பயிற்சியளிக்கும் இடத்தை விற்கலாம் என தீர்மானித்துள்ளேன். அதனை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை விஜய் உருவாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.