சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு சேவையை முறையாக மேற்கொள்வதற்காக தீ அணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்புப் பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் பக் மாதத்தில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை கண்காட்சிக்காகபெரஹெரவிற்காக தீயணைப்புத் பிரிவினால் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தற்போதுள்ள பிரச்சினைகளைக் குறைத்து, பிற பண்டிகை சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் சேவைக்கு திறமையான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது காணப்படும் மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறை காரணமாக திறமையான சேவையை வழங்குவது ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று கண்டி தீயணைப்பு சேவை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிதவளப் பற்றாக்குறை, தொழில்நுட்ப மற்றும் நீர் விநியோகம் என்பவற்றின் போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் சேவைகளைச் செய்து வருவதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த கலந்துரையாடலின் போது, 2018 க்குப் பிறகு ஒரு சேவை அமைப்பை நிறுவத் தவறியது சேவை சிக்கல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது என்பது அடையாளம் காணப்பட்டது.
ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் 37 தீயணைப்பு அலகுகள் அமைந்துள்ளன, அவை நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது