உள்ளூர் செய்திகள் செய்திகள்

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சந்தேக நபர் மறைந்திருப்பதாக நம்பப்படும் கிட்டத்தட்ட 200 இடங்களில் இதுவரை சோதனை நடத்தியதாகவும், ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தலைபேசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவரைப் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி களுத்துறை பகுதிக்குச் சென்று ஒரு தங்க நகைக் கடையிலிருந்து சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துச் சென்றார்.

எனினும், அதன் பின்னர் சந்தேகநபர் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சந்தேக நபர் தென் மாகாண கடற்கரை வழியாக படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன