பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பொலிஸாருக்கு பயந்து ஒரு பொலிஸ்மா அதிபர் ஓடி ஒளிந்து கொள்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்பதால், மறைந்திருக்கும் பொலிஸ்மா அதிபரை கைது செய்வார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, 76 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கட்சியினருக்கு (தேசிய மக்கள் சக்தி) ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைத்துள்ளது. ஆகையினால் அவர்களுக்கு மூன்று நான்கு ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும்.
நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகின்றேன். தற்போது அரசாங்கம் நல்ல பாதையில் செல்கின்றது என நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.