இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தெங்குச் செய்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கரிலும் ஏனைய பகுதிகளில் 20,000 ஏக்கர் பயிரிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சரின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சரினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தெங்குச் செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருடத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடத்தில் தெங்கு செய்கையின் ஊடாக 2,875 மில்லியன் தேய்காய்களை உற்பத்திச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.