கம்பஹா, கிரிந்திவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் கடையொன்றிற்குள் இருந்த குழு மீது துப்பாக்கிச்
சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.