ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் இம் மாத இறுதியில் படத்தின் முன் பதிவு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.