‘ஆண்களின் உலகில் பெண் என்பவள் மிகவும் சிறியவள்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணீ குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ இன்று மகளிர் தினம். தனது உரிமைகளை பாதுகாக்கும் சமத்துவ வாழ்க்கை அமைய வேண்டும் என அனைத்து பெண்களையும் வாழ்த்துகிறேன்.
நாம் பல வருட காலமாக பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
நாம் கடந்த காலத்தை ஒரு சாபம் என்கிறோம். எனினும், எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி உள்ளது.
பெண்களின் பிரச்சினைகளுக்கான உண்மையான பதில் பெண்களிடம் இல்லை.
பெண்கள் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள், அதற்கு அவர்களை வன்முறைக்கு ஆளாக்கும் அந்த நபரின் தவறு தான் காரணம்” எனத் தெரிவித்தார்.