செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவது சந்தேகம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மார்ச் 9-ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காயத்தால் மேட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அவரை விளையாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரி ஸ்டீட் கூறியதாவது:-

மேட் ஹென்றிக்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தற்போதைய நிலையில் அவர் இடம் பெறுவது சிறிது தெரியாத நிலையில்தான் உள்ளது. அவர் கீழே விழுந்ததில் இருந்து தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது தெளிவாக தெரிந்தது. அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், மேட் ஹென்றி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஹென்றி விளையாடவில்லை என்றால் அது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன