தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மீதான செலவு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இன்று (06) பாராளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெறாது காணப்பட்ட ஜனாதிபதி ஊடக விருது விழா இவ்வருடத்தில் மீண்டும் நடாத்தப்படுவதாக அமைச்சர் இதன்போது அறிவித்தார்
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அரசாங்க தகவல் திணைக்களம், லேக் ஹவுஸ், ரூபவாஹினி, தேசிய வானொலி மற்றும் அரசாங்க அச்சகம் ஆகியவற்றிற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5.2 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஊடகவியலாளர்களுக்கான பட்டய நிறுவனம் (Chartered Institute) ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.