மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போதே அவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டார். மாத்தளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன், மாவட்ட செயலகம், விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.