செய்திகள் விளையாட்டு

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானின் கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் மிட்செல் சாண்ட்னர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பதிலாக அணியின் தலைவர் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

இதுவரை இவ்விரு அணிகளும் 73 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்க அணி 42 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவில்லை.

நியூசிலாந்து

மிட்செல் சாண்ட்னர் (தலைவர்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.

தென்னாப்பிரிக்கா

டெம்பா பவுமா (தலைவர்), கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ராஸ்ஸி வான் டெர் டுசென்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன