2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை 2025 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2025 மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
