இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு Vital Strategies நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Bloomberg Philanthropies மற்றும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் சுகாதாரத்திற்கான தரவுகள் (னு4ர்) தொடக்க முயற்சி வேலைத்திட்டத்தின் மூலம் முக்கியமான பொதுச் சுகாதார தகவல்களைத் திரட்டுதல் மற்றும் பயன்பாட்டைப் பலப்படுத்துவதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன.
குறித்த வேலைத்திட்டத்துடன் ஒத்துழைப்புடன இயங்கி வருகின்ற Vital Strategies நிறுவனம், இலங்கையில் சுகாதாரத்திற்கான தரவுகள் தொடக்க முயற்சியில் முன்னணி தொழிநுட்பப் பங்காளராக இயங்கி வருவதுடன், தற்போது 03 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ், குறித்த நிறுவனத்தின் இலங்கையின் நிதி முகவரான இலங்கை சுகாதார தகவல் சங்கத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு 19.50 மில்லியன் ரூபாய்கள் நிதியை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக Vital Strategies நிறுவனமும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.