நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவு பிரிவால் வெளிக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மார்ச் 02 காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.