மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.