சிலாபத்தில் 247 கிலோ 946 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை
இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் காரில் செல்லப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 114 பொதிகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தையும் பறிமுதல் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.