2025 மார்ச் 2 இலிருந்து 8 ஆம் திகதி வரை “தேசிய மகளிர் வாரமா”கப் பிரகடனப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை தேசியக் கொண்டாட்டமாக தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலான திட்டங்களை செயற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.
அது “தெனுமட திறசர. ஹெடக் – சவிமத் எய வே மகக் (மாதருக்கு நிலைபேறான எதிர்காலம் – மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி) ” எனும் பிரதான தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தினம் “சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவம், வலுவூட்டல்” எனும் கருப்பொருளில் கொண்டாட்டப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977ஆம் ஆண்டில், மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளினால் மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Next article: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண ஆதவுNext