(23-02-2025) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்வில் சில மாற்றமான சூழல் அமையும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். துணைவர் வழியில் அனுகூலம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : திருப்தியான நாள்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
—————————————
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : சோர்வுகள் மறையும்.
மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.
—————————————
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமின்றி நடக்கும். எதிர்பார்ப்புகள் சில நிறைவேறும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். பிரமுகர்களின் சந்திப்புகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கூட்டுத் தொழிலில் இருந்துவந்த நெருக்கடி நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
—————————————
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : புரிதல் மேம்படும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
—————————————
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரிலிருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பணியாளர்களால் லாபம் மேம்படும். ஆதரவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : மாற்றம் மேம்படும்.
உத்திரம் : லாபம் மேம்படும்.
—————————————
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நூதன பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விவசாயம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உற்சாகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
—————————————
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆதாயகரமான நாள்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : போட்டிகள் குறையும்.
—————————————
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். தோற்றப்பொலிவு உண்டாகும். நண்பர்கள் வழியில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சில உதவிகள் சாதகமாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
விசாகம் : நெருக்கம் மேம்படும்.
அனுஷம் : உதவிகள் சாதகமாகும்
கேட்டை : ஆதாயகரமான நாள்.
—————————————
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
—————————————
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம் : வேறுபாடுகள் மறையும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
—————————————
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வித்தியாசமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : தாமதங்கள் விலகும்.
பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
—————————————
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ஆடியோ வடிவில்..!
பிப்ரவரி 23, 2025
எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் விலகும். வியாபார பணிகளில் வேலையாட்களுடன் பொறுமையை கையாளவும். குடும்ப பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : குழப்பங்கள் விலகும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————
அனைத்து ராசிகளுக்கான தினசரி பலன்கள், வாரம், மாதம், வருட பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள், பிறந்தநாள் பலன்கள் உட்பட பல தகவல்களை இலவசமாக அறிய நித்ராவின் ராசிபலன்கள் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D