உள்ளூர் செய்திகள் செய்திகள்

காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத இந்த மும்மொழிவானது பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதுடன் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் நீதிக்கோட்பாடு, சுய நிர்ணய உரிமை என்பவற்றை புறக்கணிப்பதாகவும் உள்ளது.

காஸா மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடானது நீதி, சமாதானம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் அரசுரிமைக்கான நியாயமான அபிலாஷைகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வுடன் துன்பங்களை அனுபவித்த காஸா மற்றும் பலஸ்தீன மக்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம். முன்மொழியப்பட்ட இடமாற்றத் திட்டம் அநீதியானது மட்டுமன்றி பிராந்தியத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.

பலஸ்தீன மக்களின் நிலம், வீடுகள் மற்றும் இறையாண்மைக்கான உரிமைகள் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்கள், நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் மாநில உரிமைகளைப் பெற தங்களது ஆதரவை தீவிரப்படுத்துமாறு உலகளாவிய தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனச்சாட்சி உள்ள அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம்.

பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹு தஆலா வலிமைகளையும், பொறுமையையும், வெற்றியையும் வழங்குவானாக. அப்பகுதியில் நீதியும் நிரந்தர அமைதியும் நிலவட்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன