Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பணியில் , அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொலிஸ், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் பிரதான நிகழ்வு நாளைக் காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவு பிரதான கடற்கரையில் இடம் பெறவுள்ளது. அதேவேளை ஏனைய 19 இடங்களிலும் அதே நேரத்தில் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படும்.
Next article: கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்Next