முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க நிரப்பவுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின் எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரும் அவருடன் இணைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருமாறு ஏற்கனவே பல்வேறு கட்சிகள் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.