வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதனால் வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத் தோட்டச் செய்கை போன்ற செயற்பாடுகளுக்காக நீரை பயன்படுத்துவதை குறைத்து அத்தியாவசியமான அன்றாட செயற்பாடுகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.