செய்திகள் விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலை இந்திய போட்டிகள் மற்றும் அரையிறுதி ஒன்றுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சம்பியன்ஸ் கிண்ண டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது, மேலும் இன்று (பெப்ரவரி 16) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்போது ரசிகர்கள் வரையறுக்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்க முடியும்.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையேயான தொடக்கப் போட்டி, பெப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டி மற்றும் மார்ச் 2 அன்று நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இறுதி குழு நிலை போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்க முடியும்.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பரபரப்பான போட்டியில், உலகின் முதல் எட்டு அணிகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

பெப்ரவரி 3 ஆம் திகதி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நீண்ட காலமாக மிகவும் விருவிருப்பாக இருந்து வருகின்றன, இந்தப் போட்டிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரை வென்ற பிறகு உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, சனிக்கிழமை துபாய் சென்றுள்ளதுடன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன