கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரியதான, தற்போது எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாத 2.5 ஏக்கர் காணித் துண்டை பொது மைதானத்துக்காக பாவிக்கக்கூடிய வகையில் ஸ்ரீபாலி வளாகத்துக்கு விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.