உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம் 

கட்டுநாயக்காவில் புதிய நுழைவுக் கவுண்டர்கள் பல…

புதிய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு 

  • போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணப் போக்குவரத்தை அரசாங்கத்தினால் ஆரம்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்னாயக்கவின் தலைமையில் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக வேகமாக அதிகரித்து வருவதனால் விமான நிலைய வசதிகளை முடிந்தவரை பரவலாக்குவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது. தற்போது காணப்படும் நுழைவுக் கவுண்டர்கள் (Check – in Counter) 20 அளவிலாவது  அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கு அவசியமான இடங்களும் பார்வையிடபமற்றும்

மேலும் வசதிகளை அதிகரித்து வேறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு எமது விமான நிலையத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டதுடன்,  வருடத்திற்கு 12 மில்லியன் அளவிலான விமான பயணிகளின் அளவை 2028  ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தயாராவதற்கு அவசியமான ஆலோசனைகளும் அமைச்சரினால் வழங்கப்பட்டன. 

இச் செயற்பாடுகள் அனைத்தும் சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்திருப்பதாலும் நாட்டிற்கு பிரதான வருமான வழிகளில் ஒன்றாக சுற்றுலாத்துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன