உள்ளூர் செய்திகள் செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர தொழிலுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் ‘தொழிற் சந்தை 2025’ 12 ஆம் திகதி கலைப்பீடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் அலகின் உதவியுடனும் ‘சேவ் லைவ்’ அமைப்பின் அனுசரணையுடனும் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்பட்டது. அறுபதிற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்ற இத்தொழிற்சந்தையில் அரச […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இராணுவத் தளபதி அநுராதபுரம் ‘அபிமன்சல-1’ நலவிடுதிக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுர மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலவிடுதி ‘அபிமன்சல-1’ க்கு 2025 மார்ச் 11 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு நுழைவாயிலில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோரை நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர் ஒருவர் அன்புடன் வரவேற்றார். தனது […]

உலகம் செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு தயாரில்லையெனில் கடும் நடவடிக்கை: ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

சவூதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “ எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசபந்து தென்னகோன் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்வது சோகமானது – அரசாங்கம்

தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த வகையிலும், விசாரணைகளை தாமதப்படுத்த அரசாங்கம் எந்த விருப்பமும் கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஐ.தே.கவின் அமைப்பாளர் சஜித்துடன் சங்கமம்

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். மாத்தறை நகர சபையின் முன்னாள் பிரதி மேயராகவும் இவர் பதவி வகித்தார். இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பிமல் ஜயசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் விளையாட்டு

சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் தொடர் – காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் தகுதி

அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றிய ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி UEFA சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அட்லெடிகோ அணி ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்து கோல் அடித்தது. கோனர் கல்லாகர் அணிக்கு தொடக்கத்திலேயே முன்னிலை வழங்கினார். பின்னர் இரு அணிகளும் வலுவான டிஃபென்ஸுகளால் எந்த கோல்களும் அடிக்கவில்லை. […]

உலகம் செய்திகள்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பயணிகளை மீட்கும் பணிகள் நிறைவு

பாகிஸ்தானில் பலூச் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய 33 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தெரிவித்தார். பயங்கரவாதிகளால் 21 பயணிகளும், நான்கு படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ், கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் போலன் பகுதியில் உள்ள மஷ்காஃப் சுரங்கப்பாதை அருகே பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, ஒன்பது பெட்டிகளில் இருந்த […]

உலகம் செய்திகள்

இஸ்ரேலிய கப்பல்களை மீண்டும் தாக்கவுள்ள ஹூத்தி படைகள்

செங்கடல், அரபிக் கடல், பாப் அல்-மந்தாப் நீரிணை, ஏடன் வளைகுடா ஆகியவற்றின்வழி செல்லும் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தாங்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தவிருப்பதாக ஏமனின் ஹூத்தி படைகள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்த பிறகு ஓரளவு அமைதி நிலவியது. இப்போது அந்த அமைதி முடிவுக்கு வரவிருக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹூத்தி படைகள், கப்பல்களைக் குறிவைத்து 100க்கும் மேலான தாக்குதல்களை நடத்தின. காஸாவில் ஹமாஸ் […]

உலகம் செய்திகள்

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த க்செனியா பி. என்று குறிப்பிடப்படும் 35 வயதான பெண். இவர், கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் சட்டவிரோதமான முறையில் 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததற்காக அவருக்கு கசகஸ்தான் நாட்டில் 12 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

“மௌனத்தை கலைப்போம்” – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில் பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் மக்கள் கவனயீர்ப்பு செயல்வாதம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது.