உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்

2025 மார்ச் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சிறுவர் தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (NSCECL ) முதலாவது கூட்டம்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child Labour) இந்தவருடத்திற்கான முதலாவது கூட்டம் அண்மையில் (11) நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த தேசிய செயற்குழுவின் தலைவர், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ, தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இலங்கையில் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதை இல்லாதொழிப்பதுடன் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. சிறுவர்கள் தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் கொள்கையின் கீழ் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு 3,000 ரூபா உதவித்தொகை இம்மாதத்தில்

70 வயதைக் கடந்த குறைந்த வருமானம் பெறும் முதியோரருக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவு, மார்ச் மாதத்தில், அஸ்வெசும குடும்பங்களில் உள்ள 70 வயதிற்கு அதிகமான முதியோர்களுக்காக 2024 ஆண்டின் நவம்பர் மாதத்தில் இருந்து நலன்புரி பயனாளிகள் சபையினால் நேரடியாக ஸ்லிப் முறை ஊடாக அஸ்வெசும கணக்குகளுக்கு சம்பந்தப்பட்ட வைப்பிலிடப்பட்டதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அஸ்வெசும குடும்பங்களில் உள்ள முதியவர்கள் தவிர்ந்த இதுவரை கொடுப்பனவு பெற்று வரும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்திய-இலங்கை நட்பை அடையாளப்படுத்தும் வகையில் இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) சமீபத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா வினால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலின் டி ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தியா மற்றும் இலங்கை இடையே காணப்படும் நீண்டகால நட்பை நினைவுபடுத்தும் விதமாக இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே இடெம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்நன்கொடை வழங்கப்பட்டது. நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கையளித்துள்ளார். அதனால் பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம் வழங்கிய இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சபையில் வாசித்ததுடன், எதிர்வரும் உள்

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் ஆரம்பத்தில் நாட்டிற்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் பகுதியில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும், அதன் போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்து கண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இன்று (15) இதனை குறிப்பிட்டார். இச்சுற்றுப் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம் வழங்கப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

சிறப்பு நடைமுறையின் (Special pathway) ஊடாக பிரதம நிறைவேற்று அதிகாரியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய செயற்பட வாய்ப்பளித்துள்ளமையும் தெரியவருகின்றது – கோப் குழு 🔸மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – கோப் குழு 🔸வாசனைத் திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளை ஒழுங்குபடுத்த எந்த நிறுவனத்திற்கும் சட்டபூர்வ அதிகாரம் இல்லை – கோப் குழு வெளிப்படுத்தியது 🔸அதிகாரசபையின் நிதி இருப்பைப் பயன்படுத்தி அல்லது மருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அவற்றைப் பரிசோதைனை செய்ய ஆய்வுகூடமொன்றை […]

செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்த இலங்கை மகளிர் அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில், இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஒருநாள் தொடரின் பின்னர், T20 தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் இலங்கை – நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் T20 போட்டி நேற்று (14) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீராங்கனைகள் […]

உலகம் செய்திகள்

காசா’வை விழுங்கத் துடிக்கும் டிரம்ப்

ஹமாஸ் – இஸ்ரேல் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் 56,000 பேர் உயிரிழந்த காசா நகரம் இடிபாடுகளாக காட்சி அளிக்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தத்துக்கு பின் தங்கள் இடங்களுக்கு திரும்பியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் 20 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தற்போதைய தேவை. ஆனால் அவை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு […]

உலகம் செய்திகள்

கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய […]