கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 14.03.2025 அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில இடம்பெற்றது. ஏழை மீனவர் ஒருவர் கலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்தால் அதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இதுவே வசதிபடைத்த ஒருவர் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகின்றது. ஏன் ஏழை மீனவர்களை இவ்வாறு அலைக்கழிக்கின்றீர்கள்? ஏழைகளுக்கு ஒரு நடைமுறை, வசதிபடைத்தோருக்கு இன்னொரு நடைமுறையா?’ என ஆளுநர் கூட்டத்தின் ஆரம்பத்தில் திணைக்களத் தலைவர்களை நோக்கி […]