உலகம் செய்திகள்

விண்வெளியில் இருந்து விடைபெற்றார் சுனிதா வில்லியம்ஸ் – நேரலை

ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமி நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். விண்வெளி ஆய்வுப் பணிக்காக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு புளோரிடா கடற்கரையில் இன்று பூமியில் தரையிறங்க உள்ளனர். கடந்த ஆண்டு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில்

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார். மீனவர்கள் தொடர்பில் தேடுதல் உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதற்கமைய தேடுதல் இடம்பெற்று வருகின்றது. 46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வதும் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொள்வதும்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆப் பிரசங்கத்தை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக சுருக்கிக் கொள்வதுடன் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாசல்களில் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக ளுஹர், அஸர் நேரங்களில் வெளி ஒலிபெருக்கிப் பாவனைகளை நிறுத்தி உள்ளக ஒலிபெருக்கியை மட்டும் பாவித்து மாணவர்கள் பரீட்சைகளை சிரமமின்றி எழுதுவதற்கு உதவுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிக்கை பின்வருமாறு:

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நீர் விநியோக நிறுத்தம் – கட்டான வடக்கு

கட்டான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டான வடக்கு பிரதேசத்தின் நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (2025.03.19) காலை 8.00 மணி முதல் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணி நேரம் கட்டான வடக்கு பிரதேசத்தின் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் – பம்புகுலிய, முருதான, கட்டான வடக்கு, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம்

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பண்ணிலகே தெரிவித்தார். கடந்த 14ஆம் திகதி பிளிமத்தலாவ கிராம அபிவிருத்தி அப்பியாசம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கிராம அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, நாட்டின் 341 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 14,022 கிராம […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். திருவையாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தின் கீழ் 500 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக நீர்பாசனப் பொறியியலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். அங்கு சூரியமின்கலம் (சோலர்) மூலமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதால் ஏற்று நீர்பாசனத்துக்காக விவசாயிகளிடமிருந்து குறைவான தொகையே அறவிடப்படுவதாக ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன்மூலம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதிக்கும் சுற்றுலா அமைச்சுஅதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

“நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் தரத்தை மேம்படுத்துக” – ஜனாதிபதி இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

உள்ளூர் செய்திகள்

மலையக மக்களுடன் இணைந்து தேசிய வெசாக் விழா

மலையக மக்களுடன் இணைந்து இம்முறை தேசிய வெசாக் விழாவை நுவரெலியாவில் கொண்டாடவுள்ளதாக பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். இன்று (17) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நாங்கள் 12 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம். இம்முறை தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.