செய்திகள் விளையாட்டு

லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவூதியில் இடம்பெற்ற மெகா ஏலத்தின் போது ரிஷப் பண்ட் லக்னோ அணியால் 27 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் […]

உலகம் செய்திகள்

போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி முதல் நடைமுறைக்கு வரவிருக்கு போர்நிறுத்தம், ஹமாஸ் வழங்குவதாக உறுதியளித்த விடுவிக்கப்பட்ட கடத்தப்பட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் பெறும் வரை தொடங்காது என்று பிரதமர் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தியதாக,” என்று அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பின்னர், பெயர்களை […]

உலகம் செய்திகள்

எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்துச் சிதறியது – 77 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எரிபொருளை சேமிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் லொறி வெடித்துள்ளது. இதில் 77 உயிரிழந்துள்ளதுடன், மீட்பு பணியாளர்கள் உள்ளிட்ட 25 பேர் வரையில் காணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நைஜீரியாவில் எரிபொருள் லொறி வெடிப்புகள் மற்றும் விபத்துக்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கனமழை தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்

கனமழை தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை கிழக்கு, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கானது அவதான இருக்கவும்! வடகிழக்கு பருவமழை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. வரையான கனமழை பெய்யக்கூடும், ஏனைய இடங்களில் 75 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் சீகிரியாவில்

சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா அவர்களினால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமை தாங்கினார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய சுற்றுலா சொர்க்கமாகக் கருதப்படும் சீகிரியா பகுதியைச் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 19ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்றிலிருந்து (ஜனவரி 18ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினத்திற்கான வானிலை எதிர்வுகூறல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய […]

ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர் பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் […]

செய்திகள் விளையாட்டு

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தடை முதல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவும் தடை விதிக்கப்படும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்குக் கிடைத்த தகவல்களின் படி, ‘பாலிசி டாகுமெண்ட் ஃபார் […]