ஆன்மிகம் பஞ்சாங்கம் ராசிபலன்

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – ஜனவரி 19, 2025 ஞாயிறு

மேஷம்: உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர் பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.  ரிஷபம்: மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல் அரசியல் ஒழிக்கப்படும்

நாங்கள் நவம்பர் 21 ஆம் தேதி அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம். இராஜாங்க அமைச்சர்கள் இல்லை, கடந்த காலத்தில், களுத்துறையில் அமைச்சுப் பதவிகள் பேராசை கொண்டவையாக இருந்தன. எங்களிடம் களுத்துறையில் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் 1 அமைச்சரும் உள்ளனர். ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதன் குறிக்கோள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்குவது அல்ல. கடந்த காலத்தில் அப்படிச் செய்யப்படவில்லை. அப்படிப்பட்ட அரசாங்கத்தை எங்களால் மட்டுமே உருவாக்க முடியும், வேறு யாராலும் முடியாது. முன்பு அமைச்சர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தன்கல பிரதேசங்களில் கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் 2 ஐ தயார் நிலையில் வைப்பதற்கு கடற்படையினரால் ஜனவரி 15 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது அந்த நிவாரணக் குழுக்கள் புத்தன்கல பிரதேசத்தில் அதிக மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. அசாதாரண காலநிலை காரணமாக அதிக மழையினால் பதவிய, […]

உலகம் உள்ளூர் செய்திகள் கல்வி

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள பாடசாலைகளி தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை இடம்பெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி, சனிக்கிழமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட பாடசாலைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் […]

செய்திகள் விளையாட்டு

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக இந்த பிடியாணை உத்தரவு இன்று ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் வெளிநாட்டில் தங்கியுள்ள ஷாகிப், கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காசோலை மோசடி வழக்கில் பெயரிடப்பட்டார். டிசம்பர் 18 ஆம் திகதி, ஆரம்ப விசாரணைக்குப் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவால் (PCTF) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹப்புத்தளை முத்துவானவத்தை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது என்று கூறப்படும் லாரி, கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை வாகனத்துடன், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (20) ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 61 பேர் படுகாயம் (Update)

மாத்தறையின் கந்தர பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் இரண்டு இளம் குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் உள்ள கந்தர தலல்ல பகுதியில் எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்கல்லைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், விபத்துக்குப் பின்னர ஏற்பட்ட போக்குவரத்து தடைப்பட்ட தற்போது இயல்பு நிலைக்கு […]