உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால இன்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தர அதிகாரியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட இவர், முன்னர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளராகவும், சுகததாச உள்ளக விளையாட்டரங்க அதிகாரசபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன், அவர் சிறிது காலம் […]

சினிமா

10 மில்லியன் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் கடந்த 16ஆம் திகதி வெளியானது. இந்நிலையில் பட ட்ரெய்லர் சுமார் 10 மில்லியன் (1 கோடி) பார்வைககை் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி படம் […]

செய்திகள் விளையாட்டு

12வது விமானப்படை தளபதி கிண்ண கோல்ஃப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து 12வது முறையாக ஏற்பாடு செய்த ஏர் கமாண்டர்ஸ் கோப்பை கோல்ஃப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா, சீனக்குடாவில் உள்ள ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தலைமையில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்புடன். நடைபெற்றது. இங்கு, விமானப்படை தளபதி கோப்பைக்காக விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகள் போட்டியிட்டனர், மேலும் ஈகிள்ஸ் சேலஞ்ச் […]

உலகம் செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் வாகனேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2″அடி நீர்மட்டம் அதிகரித்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. உருகாமம் பகுதியில் 101.1 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 ” அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது, இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 84.0மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33 ஒருஅடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தும்பங்கேணியில் 62.5 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 07 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

இலங்கையின் ஏற்றுமதியாளர் ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதான, ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் விழா, 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது. இந்த ஆண்டு விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், 2023ஃ24 நிதியாண்டிற்கான ஏற்றுமதித் துறையில் முழுமையாகவும், தனித் தனியாகவும் பொருட்கள் மற்றும் சேவைத் துறையிலும் அதிவிசேட முன்னேற்றத்தைக் காட்டிய சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான […]

செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் புலம்பெயரும் தொழிலாளர் சமூகத்திற்கு, தரமான பயிற்சியை வழங்குவது குறித்து தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்தப் பயிற்சி மையங்களில் உள்ள அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் அவ்வாறு வழங்கப்படும் வசதிகள் உயர் தரத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன. இது தற்போதுள்ள பயிற்சியை மிகவும் முறையான […]

ஆன்மிகம் ராசிபலன்

ராசிபலன்

மேஷம் ராசி காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். அலுவலகப் பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் […]

ஆன்மிகம் பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி சஷ்டி காலை 10.35 வரை பிறகு சப்தமி நட்சத்திரம் அஸ்தம் இரவு 9.07 வரை பிறகு சித்திரை யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை சந்திராஷ்டமம் சதயம் இரவு 9.07 வரை பிறகு பூரட்டாதி சூலம் கிழக்கு பரிகாரம் தயிர்

விளையாட்டு

முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மலேசிய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்திருந்தது. இலங்கை அணி சார்பில் தஹமி செனெத்மா 55 ஓட்டங்களையும், சஞ்சனா கவிந்தி […]