தேங்காயை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்; உற்பத்தித் திறனை அதிகரிக்காது எவ்வித கைத்தொழிலுக்கும் எதிர்காலத்தில் செல்ல முடியாது. அரிசி மற்றும் தேங்காய் பிரச்சினைகள் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படாமையினால் தான் ஏற்பட்டது. […]