உள்ளூர் செய்திகள் செய்திகள்

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவர் நியமனம்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்களிடம் இருந்து பெயர் குறித்த நியமனங்களை மேற்கொள்வதற்கு வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்களிடம் இருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவை பலப்படுத்தப்படும்

அரச சேவையின் சரியான தரவு கட்டமைபொன்று ஜூன் மாதத்திற்குள் தயாரிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது  புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வீடு வழங்கல்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 22ம் திகதி அன்று பண்டாரகம, வல்கமாவில் செல்வி எம். நிலுஷா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த திட்டம், இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, மேற்கு பாதுகாப்பு படை […]

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ‘இஸ்ரேல் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில், மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் ஹமாடி தனது வீட்டுக்கு அருகில் துப்பாக்கியால் 6 முறை சுடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஹமாடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ஹமாடியின் கொலைக்கு […]

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு

பிள்ளை” என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்குவது பற்றி பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் (21) பாராளுமன்றத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் […]