உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரியதான, தற்போது எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாத 2.5 ஏக்கர் காணித் துண்டை பொது மைதானத்துக்காக பாவிக்கக்கூடிய வகையில் ஸ்ரீபாலி வளாகத்துக்கு விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மியன்மார் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரிகேடியர் ஜெனரல் சாவ் மோ எல்வின் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப் – என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 ஜனவரி 28 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இராணுவத் தளபதியுடனான கலந்துரையாடலின் போது, நாட்டின் நலனுக்காக நாடு தழுவிய அளவில் இராணுவம் செய்த பங்களிப்புகளுக்கு பாதுகாப்பு இணைப்பாளர் தனது பாராட்டை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்

நாட்டில் உள்நாட்டு விமானப் பயணத் திட்டம்  கட்டுநாயக்காவில் புதிய நுழைவுக் கவுண்டர்கள் பல… புதிய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு  நாட்டில் உள்நாட்டு விமானப் பயணப் போக்குவரத்தை அரசாங்கத்தினால் ஆரம்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்னாயக்கவின் தலைமையில் அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக வேகமாக அதிகரித்து வருவதனால் விமான நிலைய […]

உலகம் செய்திகள்

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

ஜப்பானிய நிதியுதவி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கடற்றொழில் அமைச்சரும் ஜப்பானிய தூதரும் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். இது தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வனங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

உள்ளூர் செய்திகள் செய்திகள்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதி மேஜர் ஜெனரல் சமில முனசிங்க (ஓய்வு), இன்று (ஜனவரி 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அன்பான வரவேற்பைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வளர்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பில் அதன் பங்கை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது குறித்து கவனம் செலுத்தி, மேஜர் ஜெனரல் முனசிங்கவுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உலகம் செய்திகள்

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் சாதனை படைத்த மிட்ஷிப்மேன் தென்னகோனை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் (PNA) நடைபெற்ற 122வது மிட்ஷிப்மேன் மற்றும் 30வது குறுகிய சேவை ஆணைய (SSC) பாடநெறியின் அதிகாரமளிப்பு விழாவின் போது, Sword of Honour விருதை பெற்ற இலங்கை கடற்படையின் மிட்ஷிப்மேன் T M I விமுக்தி தென்னகோனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இன்று (ஜனவரி 27) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரை, மிட்ஷிப்மேன் T […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் கண்டறியப்பட்டது

அனுராதபுர மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்குக் காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாகக் அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு காணப்படும் சாத்தியப்பாடுகள் தொடர்பாக மற்றும் “சிட்டி பிராண்டிங் (City Branding) முறையை பயன்படுத்தி அனுராதபுர நகரை சுற்றுலா கவர்ச்சி மிகுந்த தலமாக உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அனுராதபுர மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நுவரெலியா, சாந்திபுர ‘ஈகிள்ஸ்’ பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ‘ஈகிள்ஸ்’ பார்வையாளர் மையம் கட்டப்பட்டுள்ளது. அந்த மத்திய நிலையத்திலிருந்து, நுவரெலியா நகரம், கிரகரி ஏரி, ஹக்கல, ஏழு கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல சிறப்பு இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வாய்ப்பு பெறுவார்கள். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட்டுகள் QR முறை […]

உலகம் செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு

நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது. லொறி மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லொறி தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்ததோடு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]