செய்திகள்

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை நீக்கம்

மோட்டார் வாகன இறக்குமதி மீது வித்க்கப்பட்டிருந்த தற்காலிக தடையை மூன்று கட்டங்களின் கீழ் நீக்குவதற்கு அரசாங்கம் நடவக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து நடைமுறையில் இருந்த வாகன இறக்குமதி மீதான தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தனியார் பயன்பாட்டிற்கான கார்கள், வேன்கள் போன்ற மோட்டார் வாகனங்கள், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், பொருட்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மற்றும் விசேட செயல்பாடுகள் என […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய கொள்கை

குழந்தைப் பருவ அபிவிருத்தி தேசிய கொள்கையொன்றை தயாரிப்து தொடர்பிலான பேச்சுவார்த்தையின் முதல் சுற்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இசுருபாயவில் இடம்பெற்றது. சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் செயற்படுத்தப்படும் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஒன்றிணைத்து ஒரே கொள்கையின் கீழ் அதனை செயற்படுத்த தேவையென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கென ஒரே கொள்கையை கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான ‘BNS SOMUDRA JOY’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘BNS SOMUDRA JOY’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக (2025 ஜனவரி 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Frigate (Modified Hamilton Class High Endurance Cutter) ரக ‘BNS SOMUDRA JOY’ போர்க்கப்பலானது, 115.2 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 274 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக Captain Md. Shahriar Alam கடமைப்புறிகிறார். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வேகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது. • பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் • பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்துதல் • மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (31) பிற்பகல் சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை கூறினார். போக்குவரத்து, பெருந்தெருக்கல்,துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

போக்குவரத்து சிக்கல்களை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்ப்பதற்கான முடிவுகள். – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

போக்குவரத்துப் பிரச்சினைகளை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்க்க முடிவுகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (30) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில், அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களையும் சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பயணிகளின் பிரச்சினைகள், அனுமதிப்பத்திர சிக்கல்கள், பணியாளர் பிரச்சினைகள், அனுமதி சிக்கல்கள், நிறுவனங்களுக்கு வருமானம் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்கள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் மேலதிக் அலங்கார சிக்கல்கள், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதி இன்று யாழ் விஜயம் – பல நிகழ்வுகளில் பங்கேற்ப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார். இன்று முற்பகல் 10:00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்குபற்றினார். அதனையடுத்து இன்று (31) பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous article: எதிர்கால […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அதன் தற்போதைய மட்டத்தில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2025 சனவரி 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீதான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளைக் கவனமாக கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கி ஒருங்கிணைவதனை நிச்சயப்படுத்துகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்-