உள்ளூர் செய்திகள் செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நேற்று (2) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

படைத்தளபதி 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 31 அன்று 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார். வருகை தந்த படைத்தளபதியை 3 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து வரவேற்றார். பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் எதிர்கால நலனுக்கான தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். […]

உள்ளூர் செய்திகள் செய்திகள் விளையாட்டு

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சுபாஷினி நிரஞ்சலா வீரசிங்க மற்றும் சமித்த […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வெளிநாட்டு செலாவணியை மீதப்படுத்தி உள்நாட்டு புதிய கண்டுபிடிப்பின் ஊடாக யானை – மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு

இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை – மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான பூர்வமான தீர்வொன்றாக உள்நாட்டு யானை வேலிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய பொறியியலாளர் மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் NERDC) பொறியியலாளர்களினால் சாத்தியமாகியுள்ளது. இதன் முன்னோடித் திட்டமாக வீரவில திறந்தவெளி முகாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த யானை வேலிக் கட்டமைப்பை பூர்த்தி செய்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்வு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறைக் குழு தலைவர் உட்பட 17 உறுப்பினர்களைக் உள்ளடக்கி உள்ளது. உள்ளூர் மருந்து தொழிற்சாலைகள் உள்ளூர் மருந்து உற்பத்தி உள்ளூர் மருந்து கடைகள் உள்ளூர் மருத்துவ உபகரணங்கள் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிரதமர் தலைமையில்…

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் முன்பிள்ளைப் பருவ விருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பகட்ட கலந்துரையாடல் “இசுறுபாய” கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன்போது நாடு முழுவதும் பல்வேறு விதங்களில் செயற்படுத்தப்படுகின்ற முன் பிள்ளைப் பருவ அபிவிருத்திக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே கொள்கையின் கீழ் செயற்படுத்துவதற்காக அவசியமான கொள்கையைத் தயாரித்து, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மாவை. சேனாதிராசாவின் இறுதிக்கிரியைகள் இன்று

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெறவுள்ளன. அதனை தொடர்ந்து மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளது. மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆன்மிகம் வணிகம்

இன்றைய பஞ்சாங்கம்1/2/2025

திதி: வளர்பிறை த்ருதிய – 11:40:35 வரை மாதம் பூர்ணிமாந்த: மாசி மாதம் அமாந்த: மாசி கிழமை: சனி கிழமை | வருஷம்: 2081 நக்ஷத்திரம்: பூரட்டாதி – 26:33:43 வரை யோகம்: பரிக – 12:24:08 வரை கரணம்: கர – 11:40:35 வரை, வணிஜ – 22:28:38 வரை சூரியோதயம்: 07:09:40 | சூரியாஸ்தமனம்: 18:00:05

உள்ளூர் செய்திகள் செய்திகள்

மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு சேவை நலன் பாராட்டு விழா

முன்னதாக ஏ9 பிரதான வீதியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து நீதிபதி மா.இளஞ்செழியன் வரவேற்கப்பட்டதுடன், அவரது 27 வருட நீதித் துறை சேவையை பாராட்டி வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.