செய்திகள் விளையாட்டு

பின்லாந்தில் இடம்பெறும் உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் யுபுன் அபேகோன் சிறப்பு வெற்றி

பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இப்போட்டியில் அவர் தனிப்பட்ட ரீதியாக சிறந்த திறமையை வெளிக்காட்டியமை விசேடமானதாகும். அவ்வாற இதற்கு முன்னர் ஆரம்ப சுற்றுப்போட்டியில் அவர் 6.69 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து அதில் முதலிடத்தை வெற்றி கொண்டார்.

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் பேரா ஏரியில் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரால் சுத்திகரிப்பு

அரசாங்கத்தின் தொடர்ச்சியான ‘சுத்தமான இலங்கை’ முயற்சியின் ஒரு பகுதியாக, முப்படைகளும் சிவில் பாதுகாப்பு படையினர் (CSD), கொழும்பு மாநகர சபை (CMC) மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை இணைந்து இன்று (பெப்ரவரி 6) காலை பேரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர். கொழும்பின் மையப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க நீர்நிலையான பெரா ஏரியின் தூய்மையை மீட்டெடுத்து பராமரிப்பதே இந்த சிறப்புத் திட்டத்தின் நோக்கமாகும். சுத்தம் செய்யும் முயற்சிகள் […]

செய்திகள் விளையாட்டு

திமுத் கருணாரத்ன சார்பில் லசித் மாலிங்கவின் கோரிக்கை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ள நிலையில், குறித்த போட்டியை பார்வையிடுவதற்கு சகல கிரிக்கெட் ரசிகர்களும் செல்ல வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி திமுத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரையில் நாட்டில் சுமார் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் டெங்கு அதிக ஆபத்துள்ள 16 மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர், அதன் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான KRI DIPONEGORO – 365 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘KRI DIPONEGORO – 365′ என்ற போர்க்கப்பல் நேற்று (2025 பெப்ரவரி 04,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள CORVETTE FSGHM என்ற ‘KRI DIPONEGORO – 365’ போர்க்கப்பல் 90.71 மீட்டர் நீளமும் மொத்தம் 120 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் WIRASTYO HAPRABU கடமையாற்றினார். மேலும், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான KRI DIPONEGORO – 365 என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்’ – 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு மூன்று நிக்காயவினதும் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரரர்களின் ஆசீர்வாதங்களுடன், மகாவிஹார பரம்பரையின் சியாமோபாலி மகாநிகாயவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான நாயக்க தேரரின் வழிகாட்டலின்படி பிரித் தர்ம உரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அத்துடன், சர்வமத அனுஷ்டானங்கள் இன்று (04) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. கொழும்பு 03, பொல்வத்தவில் உள்ள […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2025 பெப்ரவரி 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, […]

உலகம் செய்திகள்

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதியின் யாழ் பயணத்திற்கு விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு விமானப்படை விமானங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. ஜனாதிபதி உத்தியோகபூர்வ காரில் பயணம் மேற்கொண்டதாகவும், ஜனாதிபதி விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகம் உள்ளூர் செய்திகள் செய்திகள்

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ‘KRI BUNG TOMO – 357’ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 ஜனவரி 31 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் Multirole Light Frigate ரக ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 01) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர். மேலும், கப்பலின் தளபதி கெப்டன் […]