உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி, கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாகமன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

இலஞ்சம் கோரிய ஹட்டன் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க 20,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கினிகத்தேன காளி கோவிலில் பலிசெலுத்துதல் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படும் ஒரு நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது. […]

சினிமா

அட்லீயை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்

அட்லீ மற்றும் ஷாருக் கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஹிட் ஆகி நல்ல வசூலை பெற்று வருகின்றன. அதனால் தென்னிந்திய இயக்குநர்களுக்கு ஹிந்தியில் வாய்ப்புகளும் அதிகம் வர தொடங்கி இருக்கிறது. அனிமல் படம் தொடங்கி ஜவான் படம் வரை பல படங்கள் தென்னிந்திய இயக்குனர்கள் இயக்கி பாலிவுட்டில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இந்நிலையில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

* திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டம் குற்றங்களை தடுப்பதற்கு புதிய சட்டங்களை தயாரிப்பது குறித்து கவனம் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியத்தை வழங்கல்

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. • 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரெயார்களுக்கு • காலபோகக் கூட்டங்களில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்தல்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கை – 2024 வெளியீடு

உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு – 2024 (Global School-Based Student Health Survey – 2024) இன் இலங்கை அறிக்கை அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தலைமையில் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் குடும்ப சுகாதாரப் பணியக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. இங்கு, உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கையின் முதல் பிரதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி […]

செய்திகள் விளையாட்டு

சவுதியில் புதிய T20 தொடர் விரைவில் அறிமுகம்

சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்படும், டென்னிஸ் விளையாட்டை ஒத்தவகையில் கிராண்ட்ஸ்லாம் வடிவில் சர்வதேச T20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமொன்று இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரபல வீரரான நீல் மாக்ஸ்வெல்லின் ஆலோசனையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், இத்திட்டத்துக்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன்படி, டென்னிஸ் விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறுகின்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களைப் போல, ஆண்டொன்றுக்கு நான்கு வேறு இடங்களில் நடைபெறும் […]

செய்திகள் விளையாட்டு

களத்தில் கோபப்பட்டமைக்காக இன்றும் வருந்தும் தோனி

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் களத்தில் மிகவும் அமைதியான வீரர்களில் ஒருவர். கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, தனது வழக்கமான பாணியை மீறி கோபமாக விளையாடுவதை சில சந்தர்ப்பங்களில் மட்டுமே காண முடியும். தோனி தனது பொறுமையை இழந்த ஒரு சூழ்நிலையைப் பற்றியும், இன்று அதற்காக அவர் வருந்துவதைப் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு […]

உலகம் செய்திகள்

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு

அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், […]