உள்ளூர் செய்திகள் செய்திகள்

பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளை ஆரம்பிக்க அறிவுறுத்தல்

பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளை ஆரம்பிக்க அறிவுறுத்தல் மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளிகள் மனரீதியாக குணமடையும் இடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார். பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளைத் தொடங்க இதன்போது அறிவுறுத்தப்பட்டது. மருத்துவமனை அமைப்பை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

E-8 விசா சட்டவிரோதமானது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திறகோ, தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கோ E-8 தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை. அதன்படி, எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி செயிக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]

ஆன்மிகம் செய்திகள்

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா தொடர்பில் அறிவிப்பு..!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று இடம்பெற்றதுள்ளது அதன்படி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4000 இலங்கை பக்தர்களையும், 4000 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 1000 நபர்களும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் […]

உலகம் சினிமா செய்திகள்

ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளாவிய ரீதியில் வெளியானது. அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் ரூபாய் 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் செய்திகள்

தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றம் வருகை

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, பாராளுமன்ற […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையில் அறிமுகம் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடனான கலந்துரையாடல் (07) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் பொது நிதியை முறையாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிறுவன மட்டத்தில் உற்பத்தித்திறன் உயர்வாக செயல்படுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என பிரதம செயலாளர் மாகாண அமைச்சுகள் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது. இதன் கீழ், ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் கழிவுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் 28 அதிநவீன கம்பெக்டர் வாகனங்களை வாங்குவதற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்த மானியம் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றலுக்கான முயற்சிகளை கணிசமாக மேம்படுத்துவதோடு, நிலையான நடைமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய அளவிலான உறுதிப்பாட்டை உறுதி செய்யும், […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப் பெற வேண்டியிருந்தது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது இருக்கும் பொருளாதார ஸ்தீர நிலமையில் இருந்து கைத்தொழில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற தனது அரசாங்கம் ஆதரவு வழங்கத் […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம்

நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் மிகப்பெரியதும், மிக முக்கியமானதுமான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்ட பின்னர், நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். சுகாதாரத் துறையில் மருத்துவ […]