உள்ளூர் செய்திகள் செய்திகள்

மின் துண்டிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

மின் துண்டிப்பு தொடர்பில் இன்று (13) இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் ஜெனரேட்டர்களும் செயலிழந்தன. இந்நிலையில், மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11 […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதேவேளை, நேற்று (02) மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார். உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2025 பெப்ரவரி 13 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 13 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவக்கூடும் என்பதுடன், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேல் மாகாணத்திலும் காலி […]

உள்ளூர் செய்திகள் கல்வி செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (10) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது, கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதிகாரிகளிடம் உரையாற்றிய ஆளுநர், கல்வித் துறையில் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், தாமதமின்றி தங்கள் சேவைகளை […]

உள்ளூர் செய்திகள் செய்திகள்

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்தனர். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் […]

சினிமா

மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இப் படத்தில் முதல் பாகத்தைப் போலவே அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளார். ஆனால், ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப் படத்தை இந்த முறை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதற்கு பதில் சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

சினிமா

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய ராயன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்பொழுது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் ப்ரியா வோரியர், அனிகா சுரேந்திரன் ஆகியோரும் இப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களுக்கு சூப்பர் நியூஸ். பட ட்ரெய்லர் இதோ….

சினிமா

சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய்பல்லவியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

உலகம் செய்திகள்

கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரமான 19 ஆவது செக்டாரில் கல்பவாசி கூடாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றியது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாயு கசிவினால் இவ் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையென்ற போதிலும் அப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் […]

உலகம் செய்திகள்

பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது. குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறி மீது வேகமாக மோதியுள்ளது. இவ் விபத்தினால் குறித்த பஸ் தீப்பற்றி எரிந்தததில் பஸ்ஸில் பயணித்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் தீயை அணைத்தனர். ஆனால், குறித்த […]